Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

புதன், 23 ஜூன், 2010

என்னவளுக்கு..என் இனிய பிறந்தநாள்






அன்பின் இலக்கணம் சொல்லி

என்னில் அகம் புகுந்தவள்..

அகம் புகுந்து என்னில்

அகம்பாவம் உடைத்தவள்.

அவளுக்கின்று பிறந்தநாள்

அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.

ஊருக்கு அடங்காதவனை

தன் உறவுக்குள் அடைத்தவள்.

பிற்போக்கு உடைத்தென்னில்

முற்போக்கு விதைத்தவள்.

என் அன்பிற்க்கின்று பிறந்தநாள்

ஆராதித்து மகிழ்கின்றேன்.

கல்லான நெஞ்சிக்குள்ளும்

காதல் மொழி புதைத்தவள்.

களங்கமில்லா என் நெஞ்சை

களவு செய்து சென்றவள்.

காதலிக்கு பிறந்தநாள்

கருணைமொழி கூறுகின்றேன்.

இறுகிக்கிடந்த உளந்தனை

உருகிக் குலைய செய்தவள்.

லப் டப் ஆன ஒலியை

லவ் டப் ஆக்கி எனை வென்றவள்.

உயிர்க் கின்று பிறந்தநாள்

உளமாற போற்றுகின்றேன்.

உமக்கு மணமாயினும்

மறவாது என் நெஞ்சம்.

முதல் காதல் ஆயிற்றே

என் மனம் முழுக்க உன் காதல் வாசமே எஞ்சும்.

என்னவளுக்கு..என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..



புதன், 12 மே, 2010

விடியலைப்போன்ற உன் அழகு





ஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.!

**********

காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகைதனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்

**********

உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்

**********

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்







உனக்காய் உனக்காய் மட்டுமே!







அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து
உன் மடி மீது
முகம் புதைத்து

வாழப்போகும்
அந்நாட்கள் தரும்
இன்பத்தை……
சொர்க்கத்தை……

இன்னொரு ஜென்மம் எடுப்பினும்
தரமுடியுமா
இவர்களால் எனக்கு?

உன்னாலே உயிர் பெற்றேன்
உன்னாலே உணர்வுகளை
சுவாசிக்கின்றேன்

உனை பிரிவதனிலும்
பிரிவது என் உயிராயிருக்க
ஆசைப்படுகின்றேன்
அன்பனே
அன்பானவனே

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!

உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம்
சின்னாபின்னம்தான்
உயிர்ப்பதாயினும்

உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்

என்னவனே எனக்குள்ளேயே
தொலைந்துவிடு
என் இறுதிவரை!



ஞாயிறு, 2 மே, 2010

முதன் முதலில்..





என் முகத்தை பாத்தேன் -உன் கண்களில்...!
என் புன்னகையை பாத்தேன் -உன் மகிழ்ச்சியில்...!
என் குரலை கேட்டேன்
-உன் பேச்சில்...!
என் மற்றதை பாத்தேன் -உன் அன்பில்...!
இன்று
என்னையே பாத்தேன் -உன் இதயத்தில்...!!!


உயிரினில் கலந்தது





பிறந்தவுடன் அம்மாவின் முத்தம்
உணர்ந்து கொண்ட உரிமை உடையது,

வளர்ந்து வருகையில் அப்பாவின் முத்தம்
அன்பை உணர்த்தி அறிமுகப்படுத்தியது.

பிறந்த நாள் விருந்தில் நண்பர்கள் முத்தம்
நட்பின் ஆழத்தை இதயத்தில் இறக்கியது.

நேற்று வரை தெரிந்த முத்தம்
இதயத்தில்
வாழ்ந்தது.


இன்று பெற்ற
உந்தன் முத்தம்
உயிரினில் கலந்தது.





சொந்தம்






வானிற்கு நிலவு சொந்தம்
நிலவிற்கு குளிர்மை சொந்தம்
பூவிற்கு வாசம் சொந்தம்
வாசம் உனக்கு சொந்தம்
உன்னை சொந்தம் ஆக்கும்
ஆசை எனக்கு சொந்தம்
நீ யாருக்கு சொந்தம் ?
எனக்கா ?



நிலவு







நிலவு ஒரு வரம் கேட்டது
இரவு என்றும் பிரியாதிருக்க
என் இதயம் ஒரு வரம் கேட்டது
உன்னை என்றும் பிரியாதிருக்க...


முத்தம்







முத்தம் கேட்டேன் .. மாட்டேன் என்றாய்
சரி

வேண்டாம் என்றேன் ..வேண்டாமா
என்றாய்
ஏய்!!!
என்னா நீ? கெஞ்சினால் மிஞ்சுகிறாய் ..

மிஞ்சினால் கெஞ்சுகிறாய் ..



சனி, 17 ஏப்ரல், 2010

என் கல்லறை








அன்று நான் கொடுத்த ரோஜா பூக்களை அவள் வாங்க மறுத்தால்!
ஆனால் இன்றோ அவளே மலர் மாலை இடுகிறாள் என் கல்லறைக்கு ..!






என் கல்லறை






அன்பே என் இதயக் கோவிலில்
உன் அழகிய காலடிகளைப்
பதிக்க எண்ணினேன்
எப்போதாவது உனக்கு
நேரமிருந்தால் வந்து பார்

என் கல்லறையை
உன் பார்வை தான்
என் மீது விழவில்லை
உன் நிழலாவது
என் மீது விழட்டும்






ஆசை நாயகி







அன்பே
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
தேயும் நிலாக்கூட
தினசரி வந்து போகும் உன்
பிறைபோல் நெற்றி பார்க்க

சிகரம்கூட சரிந்து பார்க்கும் உன்
சிரிப்பொலி கேட்டால்
சத்தமில்லாது நீ நடந்து போகையில்
மண்கூட முத்தம் தருமடி

காற்றில் உன் மூச்சுப்படுவதால் அது
தென்றலாய் மணம் வீசுதடி
கானகியே
நீ பாடும் குரல் கேட்டு
குயில்கூட தன் குரல் மற்ந்துபோச்சடி

ஆடும் மயில்கூட தன்
ஆட்டமிழந்து அந்தரிக்குதடி
ஆசை நாயகியே
ஆனந்தம் கொள்கின்றேனடி உன்
அழகினை இவர்கள் புரிந்து கொண்டதால்





கோடி அழகுகள்








கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும்
ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும்
உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ
கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான்

நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி
விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக
அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில்
கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்கா










உன் நினைவருகில்...! விண்ணைத் தாண்டிப்
போகுது.....என் எண்ணம்.
என்னைத் தாண்டிப்
போனது....வந்த துன்பம்.

மடல் கண்டு உன்னை அணைக்க....
கரம் இங்கு நீட்டுகிறேன்.
நீ..... வருவாயா...
உன்னிதயத்தைத் தருவாயா.

உன் கைப்பட்ட வரிகள்...
என் மீது விழுந்து.
புதுராகம் பாடுது...
என்னுள்ளம்.

மை கொண்ட விழிகள்...
உன் காதல் கண்டு.
மணவறை ஆனது...
என்னிதயம்.

கிளிகூட உன் பெயரை...
அழகாகச் சொல்லும்.
அதுகூட பார்க்கிறது...
உன்வரவை.

உன் காதல்...
மடல்கள்.
இரவென்றால் எனக்கு...
பஞ்சுமெத்தை.

காலம் எல்லாம்...
உன்னோடு வாழ.
காத்திருக்கின்றேன்...
உன் நினைவருகில்.








இந்த உலகம் கூட எனக்குத் தேவையில்லை..







இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..
**********************************
******************
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!

""""""""""""""""""""""""""""""
"""""""""""""""""""""
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...













புதன், 14 ஏப்ரல், 2010

வாழ்க்கை






காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..
கண்ணிமைகள் படபடக்க
கதவோரம் சென்று மறைந்தேன்..!!


கதவருகே வந்து நின்று
கை விரலால் எனைத் தீண்ட
கண்மூடி ஒரு கணமே
உன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!


கைகளுக்குள் புகுந்த என்னை
காதலால் நீ தழுவ
கணநேரத்தில் சுதாரித்தே நான்
கலவரமாய் விலகி நின்றேன்..!!


ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க..
கற்பனையில் விரிந்ததுவே நம்
அற்புதமான காதல் வாழ்க்கை..!!







வானிலா






வாஞ்சையோடு உனக்கு
வானிலா வரையும்
வண்ண மடல் இது
கண்ணால் வாசித்திடு..

விண்ணில் நான் நலம்
மண்ணில் நீ நலமா
கண்ணிமை மூடியே தினமும்
உன்னை காண்கிறேன்

பலவர்ண வானவில்
புடைசூழ...
மின்னும் நட்சத்திரங்கள்
மிளிர..
சட்டென மறையும் மின்னல்
படமெடுக்க..

இடிகள் மேளச் சத்தம்
முழங்க..
பஞ்சு மேகங்கள் என்
பிஞ்சு விரல்களை பிடித்து
அழைத்து வர..

நீலவானமதில் நான்
உல்லாசமாக
உலா வந்து
மெல்ல மெல்லமாக
மண்மீது இறங்கி

உன்னை கட்டியணைத்து
என் காதலைச் சொல்லும்
அவ்வினிய பொன்னாளுக்காக
செவ்விதழில் சாயம் பூசி

மீன்விழிகளுக்கு மை அடித்து
கருங்கூந்தலை வாரி இழுத்து
கைகால்களை அழகுபடுத்தி
தேவதை போல் உன்முன்

தோன்றும் இப்பதுமையை
தென்றலாக வருட
கடற்கரை மணலில்
படகடியில் காத்திருப்பாயா..?

இத்துடன் என் மடலை
காதலோடு முடித்து
காத்திருப்பாய் என்ற ஆவலோடு
விடைபெறும் நான்







அழகு






பூக்கள் பூக்கும்
உன்னைக் கண்டால்
ஏக்கம் கொள்ளும்.
பெளர்ணமி நிலவும்
பார்த்தால் உன்னை
தேக்கம் கொள்ளும்.

கண்ணே உன்னை
கண்டேன் முதல்நாள்
கொண்டேன் ஆசை
என்னை நீ ஏற்றிட
உன் அன்பை பெற்றிட
அதில் நான் நிலைத்திட.

எல்லாம் எல்லாம்
உன்னில் அழகு
எதை நான் சொல்வேன்
உன்னில் குறைவு.
உச்சம் நிறைவு
உந்தன் அழகு
மிச்சம் இல்லை
அச்சம் கொள்ள.

உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்த உன் அழகில்…..நான்
தொலைந்து போனேன்.







ரோஜா







என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...

முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...

உங்களை தொட்டுப் பறிக்க...

தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...

அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...


*****************************


இன்று பூத்து குலுங்கும்
என் இதயம்
நீ முத்தமிடுவதற்கு முன்
மொட்டுகளாய் இருந்ததாய் ஞாபகம்.....


வியாழன், 11 பிப்ரவரி, 2010

என் தேவதை






எண்ணங்கள்
எண்ணிக்கை இல்லாமல்
சிதறிக் கிடக்க

நினைவுகளில்
நிலை நிறுத்தி
சிந்தையில் கிடத்தி

கற்பனைக்
கவிதைகளை காதலுடன்
சிலவற்றை எழுத

எழுதுகோல்
எடுத்து சிக்கலாய் கிறுக்கினேன்
ஒற்றை வரி கவிதை,
என் தேவதையின் பெயர்.

வரம் கேட்கிறேன்





என்னவளை நினைக்கும் பொழுதெல்லாம் இதயம் துடிதுடிக்கிறது. என் இதயத்தில் வாழும் அவளுக்கு வலிக்கக்கூடாது என்பதற்காக வரம் கேட்கிறேன் கடவுளிடம் என் இதயம் நின்றுபோக.


புதன், 10 பிப்ரவரி, 2010

வள்ளல்








உன் செவ்விதழ் திறந்து
பேசுவதில்…
நீ வள்ளல் என்பதை
ஒத்துக் கொள்கிறேன்..!
அதே வேளையில்
உன் செவ்விதழ்களை மூடி
எனக்கொரு முத்தமிடு…
என்றால் மட்டும்
கொடுக்க மாட்டேன் என
கஞ்சத் தனம் செய்கிறாயே அது ஏன்?
வள்ளலிடம் கஞ்சத்தனம்
கூடாது பெண்ணே..!
நீ வள்ளலாய் இருந்தால்தான்
இந்த வறியவனுக்கு வாழக்கையே..!











ஒளிபுகமுடியாத அடர்ந்த காடு.....


அதை
நான்கே ஈரடுக்கு அறைகளாக பிரிக்கும் கொடிகள்!

அதனுள்
எப்பொழுதும் இடைவிடாது பாயும் ஆறு!

அதை
பாதுகாக்க வரிசையாய் போர்வீரர்கள்!

அவர்களுக்கு
பாதுகாப்பாக மேல் போர்த்திய கவசம்!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வனத்தில்

வனவாசம் செய்யும் தேவதையாய் ! என்னவளே நீ !

என் இதயத்தில் எப்போதும் நீ, நீ மட்டும் தான்!

இறைவா!!






இறைவன் படைத்த இதயத்தில்

இரு ஆரிக்கிள், இரு வெண்ட்ரிக்கிள்
என நான்கே அறைகள்!

ஏய்! கஞ்சனே !! இறைவா!!

இவ்வளவும் படைத்த உனக்கு
என் காதலிக்கு ஒரு தனி அறை ஒதுக்க தோன்றவில்லையா?
சரி!! மன்னித்து விடுகிறேன் போ!

இதயம் முழுவதும் அவள் தானே வசிக்கிறாள் !!

பின்பு ஏன் ஓர் தனி அறை !!!!

திங்கள், 18 ஜனவரி, 2010

காதலி






எப்போதெல்லாம் உன் காதலி
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறார்கள்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
என்னவளே..
காலமெல்லாம்
உனக்காக காத்திருப்பேன்
உன் வரவை எண்ணி!
வந்துவிட்டால்
உன் இதய மடியில்
வாழ்ந்திருப்பேன்............
இல்லையேல் மடிந்திருப்பேன்
பூமித்தாயின் மடியில்.....



என்னவள்





என்னவள் புன்னகைக்கே,
சிவந்த பூவாய் பூத்து கிடக்கும் பூமி...

அவள் பார்க்கும் பார்வைக்கே,
இலை வெட்டுகளை இணம் கேட்கும் மரங்கள்...

அவள் பேசும் பேச்சுகளுக்கே,
ஓடை நீரின் மொழிகளை ஒதுக்கும் ஓடை மீன்கள்...

அவள் கொண்ட காதலுக்கே,
வானம் கொண்ட வீண்மினை வம்புகிழுக்கும் நின்மலன் (நான்)...




கவிதை







முனிவர்கள் கடவுளைப் பார்ப்பதற்காகத்,,
தவம் இருக்கிறார்கள்,,
நானே
ஒரு தேவதையை பார்த்துவிடு
தவம் இருக்கிறேன்

♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥

இன்னொரு பிறவி வரை
என்னவளை நேசிப்பேன்
என் உயிர்
பிரிகின்றபோதும் அவளையே
சுவாசிப்பேன்


Powered By Blogger