
வாஞ்சையோடு உனக்கு
வானிலா வரையும்
வண்ண மடல் இது
கண்ணால் வாசித்திடு..
விண்ணில் நான் நலம்
மண்ணில் நீ நலமா
கண்ணிமை மூடியே தினமும்
உன்னை காண்கிறேன்
பலவர்ண வானவில்
புடைசூழ...
மின்னும் நட்சத்திரங்கள்
மிளிர..
சட்டென மறையும் மின்னல்
படமெடுக்க..
இடிகள் மேளச் சத்தம்
முழங்க..
பஞ்சு மேகங்கள் என்
பிஞ்சு விரல்களை பிடித்து
அழைத்து வர..
நீலவானமதில் நான்
உல்லாசமாக
உலா வந்து
மெல்ல மெல்லமாக
மண்மீது இறங்கி
உன்னை கட்டியணைத்து
என் காதலைச் சொல்லும்
அவ்வினிய பொன்னாளுக்காக
செவ்விதழில் சாயம் பூசி
மீன்விழிகளுக்கு மை அடித்து
கருங்கூந்தலை வாரி இழுத்து
கைகால்களை அழகுபடுத்தி
தேவதை போல் உன்முன்
தோன்றும் இப்பதுமையை
தென்றலாக வருட
கடற்கரை மணலில்
படகடியில் காத்திருப்பாயா..?
இத்துடன் என் மடலை
காதலோடு முடித்து
காத்திருப்பாய் என்ற ஆவலோடு
விடைபெறும் நான்
மிகவும் அருமை நண்பா
பதிலளிநீக்கு