Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

சனி, 26 டிசம்பர், 2009

முத்தம்
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

தேவதை
நான் முத்தம் கேட்கையில்
சீ! பொறுக்கி என்பாய் வெட்கத்துடன்!

நீ வெட்கப்படும் அழகை காணவே ஆயிரம் பொறுக்கிதனங்கள் செய்யலாம்!

பெண் வெட்கபட்டால் தேவதை ஆகிறாள்! தேவதை நீ வெட்கபட்டால் நான் என்ன ஆவது?

கவிதை

கவிதை பற்றி கவிதை எழுதுவது கடினம் என்றனர்...
அப்படியா என்றேன் சிரித்துகொண்டே.....
இன்று என்னவளை பற்றி கவிதை எழுதயிலே உணர்ந்தேன் .....
ஆம் கவிதை பற்றி கவிதை எழுதுவது கடினம் தான் என்று.....

முத்தம்
அழகியே ...!
நான் உன்னிடம் கேட்பதெல்லாம் ,
ஒரே ஒரு முத்தம் தான் .....!
உன் க
ன்க்குழி அளவு முத்தம் .
தான்...
ஆனால் ......!
என் கன்னம் குழி விழும் ..
அளவிலான முத்தம் ......!

முத்தமிழ்

முத்தமிழ் மட்டும்தானே
உனக்குத் தெரியும்
எனக்கு இன்னொரு தமிழும்
தெரியுமே என்று
சிரித்தாய்...

என்னவென்று விழிகளால்
வினவிய மறுநொடி
என் புறங்கையில்
முத்தமிட்டு இதுதான்
"முத்த தமிழ்" என்றுகூறி
ஓடிப்போனாய்...

பிள்ளைத்தமிழ் மனசுக்காரி
இவள் என்று சிலிர்க்கிறது
என் கவித்தமிழ்!

சனி, 12 டிசம்பர், 2009

என் கவிதை


என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலி
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்

அது பொய் நான் தான்
கொடுத்து வைத்தவன்
என்னவளை
காதலிப்பதற்கு

வியாழன், 3 டிசம்பர், 2009

அடர்மழை

அடர்மழை நாளொன்றில்
குளிரோடும்
சிறுது சிலிர்போடும்
ஒரு பயணம்

மழை நீர் துளிகள்
போல் துள்ளும்
என் உள்ளத்தில் உன்முகம்
கண்டு மகிழ்கிறேன்

இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
உன்னையே துறத்தும்
என் நினைவுகள்
கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....
அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் உன்
நினைவுகள்....
மழைநீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
வடியாது...
வெள்ளநீர்
விலகினாலும்
உன்னை விலகாது
என் நினைவுகள்...

புதன், 2 டிசம்பர், 2009

யார் இவள்

யார் இவள் என்று தெரியவில்லை
மனம் என்னவள் என்றது அவளைஅவள் பேச்சில் நான் என்னை இழந்தேன்
அதற்காகவே நான் தினம் பிறந்தேன்என் இதயத்தை யாரும் கேட்டு விடாதீர்கள்
என்னவள் அதைச் திருடிச் சென்றுவிட்டாள்


பொத்தி வைத்த என் ஆசையெல்லாம்
இன்று சிறகு முளைத்து சிட்டாய்ப் பறக்குதடிஉயிர்வரை சென்று உறவுகள் கொண்டு
வாழ்வது தானே வாழ்க்கையடிஇதயத்தில் நுழைந்தாய் காதலாய்ப் பிறந்தாய்
இன்று என்னுயிராய் வாழ்கின்றாய்நான் உறங்கிட உன் மடிகொடு
என் கண்ணுறக்கம் காணும்வரை விழித்திருஇரு உள்ளங்களின் சங்கமம் தானோ
இவ்வுலகில் காதல் என்று பெயர் ஆனதோஎன் கனவுகள் நினைவாகிறது உன்னால்
நிஜம் நீயாகா இன்று என் முன்னால்என் காதல்ப்பயணம் உனக்காய்க் காத்திருக்கிறது
என் உயிர்பிரியும் வரை பிரியா உறவாக நீயிருஇதயமே நீ என்றும் என்னோடு இருப்பாய்
என்று நான் எண்ணியது என் தவறோஒரு நெடியில் அவளைக் கண்டதும்
என்னை விட்டுவிலகிச் சென்று விட்டாய்என் இதயத்தில் ஒரு பாதச்சுவடு கண்டேன்
என்னவள் தான் அங்கு வந்து போயிருக்க வேண்டும்அவள் விழிகளைப் பார்த்த போதுதான் தெரிந்தது
என்னைக் காதல்ச் சிறைப்படுத்தியது அவள் விழிகள் என்றுஅடி பெண்ணே... உன் விழிகள் பேசும் மொழியென்ன
அது புரியாமல் தினம் தவிப்பவன் நானடிஎனக்குள்ளே ஏன் இந்த மாற்றம்
எல்லாம் என்னவள் செய்த மாயம்

ஞாயிறு, 29 நவம்பர், 2009

என்னவள் மீதான என் காதல்


என்னவள் மீதான என் காதல்
அதிகபட்சம் என் வாழ்நாள் வரை
குறைந்தபட்சம் என் மரணம் வரை

வாரமே வரமாகும்
திங்கள் கிழமை
நீ வந்தால்
அந்த வாரமே
வரமாகும்...

******************
செவ்வ்வாய்க்கு
ஒருதரம்
சென்று வா
அங்கேயும்
ஜீவராசிகள்
வாழத்தொடங்கும்...

*******************

புதனென்றால்
வாசிகசாலைகளை
மூடி விடுகிறார்கள்
இருந்தாலென்ன
உன் கண்கள்
திறந்துதானே
இருக்கின்றன
நான் வாசிப்பதற்கு...

******************


நீ
கள்ள வியாழனையும்
நல்ல
வியாழ்னாக்கிப்
போகிறாய்...

*******************
வானத்துக்கு வெள்ளி
வாழக்கைக்கு நீ!
வழிகாட்டி....

*******************

உனக்கு
சனி தோஷமாம்
என் வாரத்தில்
சனியையே
அழித்துவிட்டேன்

******************

ஞாயிற்று
விடுமுறையிலும்
நிறைய
வேலை செய்ய
வேண்டியிருக்கிறது
உன்னைப் பார்க்க

சனி, 28 நவம்பர், 2009

ஒரு நாள் பார்வை
ஒரு நாள் பார்வையிலே
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவளே
பார்த்தேன் உன்னை சிலநாள்
பழகினேன் உன்னுடன் பலநாள்
காலை விடிந்தது
அதுவே நம் கல்யாணமானது
நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்
நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே

க‌வ‌லை


உன்னிடம் மனம் விட்டுப்பேச,
வம்பு பேசி அரட்டையடிக்க,
உன் தோள்சாய்ந்து ஆறுத‌ல் தேட‌,
க‌வ‌லை மறந்து
உன் க‌ர‌ம் ப‌ற்றி முத்த‌மிட‌,
ஆயிர‌ம் விச‌ய‌ங்க‌ள் உண்டு என்னிட‌ம்…

உனக்காக
உனக்காக எப்போதும் உயிர் வாழ ஆசை………………!
உன் பெயரை மட்டும் உச்சரிக்க ஆசை………………..!

~~

உன் மடியில் தலை சாய்ந்து உறங்கி விட ஆசை…………!
உனக்காக மட்டும் கவிதை எழுதிட ஆசை………!

~~

உனக்கு பிடித்தவை எல்லாம் உன்க்கும் பிடிக்க ஆசை………!
எப்போதும் உன் காதல்னயி இருந்து விட ஆசை……!

~~

தனிமையில் நீ இருந்தால் நினைவாக நான் வர ஆசை………..!
நினைவாக நீ இருந்தால் நிஜமாக நான் வர ஆசை…………..!

~~

எப்போதும் என் கனவில் நீ வர ஆசை………………….!
கனவில் நடப்பதெல்லாம் நிஜமாக வேண்டும் என்று ஆசை………!

~~

என் மனதுக்குள் உன்னை குடி வைக்க ஆசை……….!
என் உயிரை உன் உயிரில் கலந்து விட ஆசை…………!

~~

உனக்காக என் உயிரை தந்து விட ஆசை………!
உனக்காக ஓர் ஜென்மம் எடுத்து வர ஆசை………..!

அழகுஉன் கூந்தலை கலைத்துச்
சென்ற குற்றத்திற்காக
தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!
கூந்தல் கலைந்து போனாலும்..?
உன் அழகு குறையாமல்
மேலும் கூடியிருக்கிறது என்பதால்
தென்றலை தண்டிக்காமல் விடுகிறேன்..!

என் காதல்

பூக்கள் அழகாய் இருக்கின்றன ...
உன் கூந்தலில் இருப்பதனால் ...

நிலவு பிடிக்கிறது ...
உன் முகம் போல் தெரிவதனால் ...

தென்றல் குளிர்கிறது ....
உந்தன் மொழி போல் வீசுவதால் ...

மயில் நடம் ஆடுகிறது...
உன் நடைதனை கண்டவுடன் ...

தேன் பலா இனிக்கிறது ...
உன் இதழ்களின் சுவை போலே ....

இருளும் வியக்கிறது ...
உன் கரு விழி தனை போலே ....

வாழ்தல் விரும்புகிறேன் ...
உந்தன் காதல் இருப்பதனால் ...

முதல் பரிசுஉனக்கு
எதை வாங்கி
வருவது என்ற
குளப்பத்தில்

கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்

கண் திறந்து
பார்க்கையில்

கையில் இருந்தது
மட்டும் சிரித்துக்
கொண்டிருந்தது

கடையில்

இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது

வெள்ளி, 27 நவம்பர், 2009

உனக்கென இருப்பேன்என் உயிர் போனால் உனக்கு அழுகை வருமோ....?
தெரியாது ...
ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்.

*********************************************
உயிரோடு இருந்தால்
உனக்கென இருப்பேன்

உயிர் இன்றிப் போனால்
உன் உள்ளத்தில் இருப்பேன்

மனைவிக்காகபிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும்...
ஏன்
அந்த உயிர் என் மனைவிக்காக
போகக்கூடாது
இறைவா என் மனைவிக்காக
நான் ஒன்றும் தரவில்லை
என்
ஆயுளையும் அவளுக்கே தந்துவிடு
நான் அவள்
இதயத்தில்
வாழ்ந்து கொள்கிறேன்

உன் உயிர் காதலன்கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது

உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே

உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே

நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
****************உன் உயிர் காதலன் .************

அன்பு


உன்னையும் என்னையும்
பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை
என்றவள் பிரிந்தே போய்விட்டாய்…
என்னை விட்டு உன்னோடு வந்து
கொண்டிருக்கிறது
என் மனமும், உயிரும்!