Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

புதன், 12 மே, 2010

விடியலைப்போன்ற உன் அழகு





ஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.!

**********

காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகைதனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்

**********

உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்

**********

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்







உனக்காய் உனக்காய் மட்டுமே!







அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து
உன் மடி மீது
முகம் புதைத்து

வாழப்போகும்
அந்நாட்கள் தரும்
இன்பத்தை……
சொர்க்கத்தை……

இன்னொரு ஜென்மம் எடுப்பினும்
தரமுடியுமா
இவர்களால் எனக்கு?

உன்னாலே உயிர் பெற்றேன்
உன்னாலே உணர்வுகளை
சுவாசிக்கின்றேன்

உனை பிரிவதனிலும்
பிரிவது என் உயிராயிருக்க
ஆசைப்படுகின்றேன்
அன்பனே
அன்பானவனே

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!

உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம்
சின்னாபின்னம்தான்
உயிர்ப்பதாயினும்

உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்

என்னவனே எனக்குள்ளேயே
தொலைந்துவிடு
என் இறுதிவரை!



ஞாயிறு, 2 மே, 2010

முதன் முதலில்..





என் முகத்தை பாத்தேன் -உன் கண்களில்...!
என் புன்னகையை பாத்தேன் -உன் மகிழ்ச்சியில்...!
என் குரலை கேட்டேன்
-உன் பேச்சில்...!
என் மற்றதை பாத்தேன் -உன் அன்பில்...!
இன்று
என்னையே பாத்தேன் -உன் இதயத்தில்...!!!


உயிரினில் கலந்தது





பிறந்தவுடன் அம்மாவின் முத்தம்
உணர்ந்து கொண்ட உரிமை உடையது,

வளர்ந்து வருகையில் அப்பாவின் முத்தம்
அன்பை உணர்த்தி அறிமுகப்படுத்தியது.

பிறந்த நாள் விருந்தில் நண்பர்கள் முத்தம்
நட்பின் ஆழத்தை இதயத்தில் இறக்கியது.

நேற்று வரை தெரிந்த முத்தம்
இதயத்தில்
வாழ்ந்தது.


இன்று பெற்ற
உந்தன் முத்தம்
உயிரினில் கலந்தது.





சொந்தம்






வானிற்கு நிலவு சொந்தம்
நிலவிற்கு குளிர்மை சொந்தம்
பூவிற்கு வாசம் சொந்தம்
வாசம் உனக்கு சொந்தம்
உன்னை சொந்தம் ஆக்கும்
ஆசை எனக்கு சொந்தம்
நீ யாருக்கு சொந்தம் ?
எனக்கா ?



நிலவு







நிலவு ஒரு வரம் கேட்டது
இரவு என்றும் பிரியாதிருக்க
என் இதயம் ஒரு வரம் கேட்டது
உன்னை என்றும் பிரியாதிருக்க...


முத்தம்







முத்தம் கேட்டேன் .. மாட்டேன் என்றாய்
சரி

வேண்டாம் என்றேன் ..வேண்டாமா
என்றாய்
ஏய்!!!
என்னா நீ? கெஞ்சினால் மிஞ்சுகிறாய் ..

மிஞ்சினால் கெஞ்சுகிறாய் ..



Powered By Blogger