
காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..
கண்ணிமைகள் படபடக்க
கதவோரம் சென்று மறைந்தேன்..!!
கதவருகே வந்து நின்று
கை விரலால் எனைத் தீண்ட
கண்மூடி ஒரு கணமே
உன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னை
காதலால் நீ தழுவ
கணநேரத்தில் சுதாரித்தே நான்
கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க..
கற்பனையில் விரிந்ததுவே நம்
அற்புதமான காதல் வாழ்க்கை..!!
மிகவும் நன்றாக உள்ளது நண்பரே. பெண்ணின் கோணத்தில் இருந்து எழுதப்பட்டது போல உள்ளதே. வாழ்த்துகள். :)
பதிலளிநீக்குசக அஜித் ரசிகரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் வலைப்பூவைத் தொடர்கிறேன். நேரம் இருந்தால் என் வலைப்பூவின் 'follower' ஆகிவிடுங்கள். :)
ஆஹா...அருமையான காதல் கவிதை
பதிலளிநீக்குவாழ்த்துகள் சிலம்பரசன்
இளமுருகன்
நைஜீரியா