

ஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.!
**********
காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகைதனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்
**********
உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்
**********
காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்

//ஒரு மத்தாப்பூவைப்போல
பதிலளிநீக்குநீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.! //
நல்லா இருக்கு :)