

கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது
உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே
உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே
நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
****************உன் உயிர் காதலன் .************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக