Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

புதன், 2 டிசம்பர், 2009

யார் இவள்





யார் இவள் என்று தெரியவில்லை
மனம் என்னவள் என்றது அவளை



அவள் பேச்சில் நான் என்னை இழந்தேன்
அதற்காகவே நான் தினம் பிறந்தேன்



என் இதயத்தை யாரும் கேட்டு விடாதீர்கள்
என்னவள் அதைச் திருடிச் சென்றுவிட்டாள்


பொத்தி வைத்த என் ஆசையெல்லாம்
இன்று சிறகு முளைத்து சிட்டாய்ப் பறக்குதடி



உயிர்வரை சென்று உறவுகள் கொண்டு
வாழ்வது தானே வாழ்க்கையடி



இதயத்தில் நுழைந்தாய் காதலாய்ப் பிறந்தாய்
இன்று என்னுயிராய் வாழ்கின்றாய்



நான் உறங்கிட உன் மடிகொடு
என் கண்ணுறக்கம் காணும்வரை விழித்திரு



இரு உள்ளங்களின் சங்கமம் தானோ
இவ்வுலகில் காதல் என்று பெயர் ஆனதோ



என் கனவுகள் நினைவாகிறது உன்னால்
நிஜம் நீயாகா இன்று என் முன்னால்



என் காதல்ப்பயணம் உனக்காய்க் காத்திருக்கிறது
என் உயிர்பிரியும் வரை பிரியா உறவாக நீயிரு



இதயமே நீ என்றும் என்னோடு இருப்பாய்
என்று நான் எண்ணியது என் தவறோ



ஒரு நெடியில் அவளைக் கண்டதும்
என்னை விட்டுவிலகிச் சென்று விட்டாய்



என் இதயத்தில் ஒரு பாதச்சுவடு கண்டேன்
என்னவள் தான் அங்கு வந்து போயிருக்க வேண்டும்



அவள் விழிகளைப் பார்த்த போதுதான் தெரிந்தது
என்னைக் காதல்ச் சிறைப்படுத்தியது அவள் விழிகள் என்று



அடி பெண்ணே... உன் விழிகள் பேசும் மொழியென்ன
அது புரியாமல் தினம் தவிப்பவன் நானடி



எனக்குள்ளே ஏன் இந்த மாற்றம்
எல்லாம் என்னவள் செய்த மாயம்

2 கருத்துகள்:

  1. கவிதை மட்டுமே எழுதிவருபவர்களில் உங்கள் பதிவுகள் சுவையாக உள்ளன. முதல் காரணம் காதல், இரண்டாவது காரணம் நேர்த்தியான படங்கள், மூன்றாவது காரணம் வண்ண எழுத்துகள், நான்காவது காரணம் சிறிய ஆனால் சீரிய அளவு.

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

Powered By Blogger