skip to main |
skip to sidebar
வாரமே வரமாகும்

திங்கள் கிழமை
நீ வந்தால்
அந்த வாரமே
வரமாகும்...
******************
செவ்வ்வாய்க்கு
ஒருதரம்
சென்று வா
அங்கேயும்
ஜீவராசிகள்
வாழத்தொடங்கும்...
*******************
புதனென்றால்
வாசிகசாலைகளை
மூடி விடுகிறார்கள்
இருந்தாலென்ன
உன் கண்கள்
திறந்துதானே
இருக்கின்றன
நான் வாசிப்பதற்கு...
******************
நீ
கள்ள வியாழனையும்
நல்ல
வியாழ்னாக்கிப்
போகிறாய்...
*******************
வானத்துக்கு வெள்ளி
வாழக்கைக்கு நீ!
வழிகாட்டி....
*******************
உனக்கு
சனி தோஷமாம்
என் வாரத்தில்
சனியையே
அழித்துவிட்டேன்
******************
ஞாயிற்று
விடுமுறையிலும்
நிறைய
வேலை செய்ய
வேண்டியிருக்கிறது
உன்னைப் பார்க்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக