
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
யார் இவள் என்று தெரியவில்லை
மனம் என்னவள் என்றது அவளை
அவள் பேச்சில் நான் என்னை இழந்தேன்
அதற்காகவே நான் தினம் பிறந்தேன்
என் இதயத்தை யாரும் கேட்டு விடாதீர்கள்
என்னவள் அதைச் திருடிச் சென்றுவிட்டாள்
பொத்தி வைத்த என் ஆசையெல்லாம்
இன்று சிறகு முளைத்து சிட்டாய்ப் பறக்குதடி
உயிர்வரை சென்று உறவுகள் கொண்டு
வாழ்வது தானே வாழ்க்கையடி
இதயத்தில் நுழைந்தாய் காதலாய்ப் பிறந்தாய்
இன்று என்னுயிராய் வாழ்கின்றாய்
நான் உறங்கிட உன் மடிகொடு
என் கண்ணுறக்கம் காணும்வரை விழித்திரு
இரு உள்ளங்களின் சங்கமம் தானோ
இவ்வுலகில் காதல் என்று பெயர் ஆனதோ
என் கனவுகள் நினைவாகிறது உன்னால்
நிஜம் நீயாகா இன்று என் முன்னால்
என் காதல்ப்பயணம் உனக்காய்க் காத்திருக்கிறது
என் உயிர்பிரியும் வரை பிரியா உறவாக நீயிரு
இதயமே நீ என்றும் என்னோடு இருப்பாய்
என்று நான் எண்ணியது என் தவறோ
ஒரு நெடியில் அவளைக் கண்டதும்
என்னை விட்டுவிலகிச் சென்று விட்டாய்
என் இதயத்தில் ஒரு பாதச்சுவடு கண்டேன்
என்னவள் தான் அங்கு வந்து போயிருக்க வேண்டும்
அவள் விழிகளைப் பார்த்த போதுதான் தெரிந்தது
என்னைக் காதல்ச் சிறைப்படுத்தியது அவள் விழிகள் என்று
அடி பெண்ணே... உன் விழிகள் பேசும் மொழியென்ன
அது புரியாமல் தினம் தவிப்பவன் நானடி
எனக்குள்ளே ஏன் இந்த மாற்றம்
எல்லாம் என்னவள் செய்த மாயம்
திங்கள் கிழமை
நீ வந்தால்
அந்த வாரமே
வரமாகும்...
******************
செவ்வ்வாய்க்கு
ஒருதரம்
சென்று வா
அங்கேயும்
ஜீவராசிகள்
வாழத்தொடங்கும்...
*******************
புதனென்றால்
வாசிகசாலைகளை
மூடி விடுகிறார்கள்
இருந்தாலென்ன
உன் கண்கள்
திறந்துதானே
இருக்கின்றன
நான் வாசிப்பதற்கு...
******************
நீ
கள்ள வியாழனையும்
நல்ல
வியாழ்னாக்கிப்
போகிறாய்...
*******************
வானத்துக்கு வெள்ளி
வாழக்கைக்கு நீ!
வழிகாட்டி....
*******************
உனக்கு
சனி தோஷமாம்
என் வாரத்தில்
சனியையே
அழித்துவிட்டேன்
******************
ஞாயிற்று
விடுமுறையிலும்
நிறைய
வேலை செய்ய
வேண்டியிருக்கிறது
உன்னைப் பார்க்க
உனக்காக எப்போதும் உயிர் வாழ ஆசை………………!
உன் பெயரை மட்டும் உச்சரிக்க ஆசை………………..!
~~
உன் மடியில் தலை சாய்ந்து உறங்கி விட ஆசை…………!
உனக்காக மட்டும் கவிதை எழுதிட ஆசை………!
~~
உனக்கு பிடித்தவை எல்லாம் உன்க்கும் பிடிக்க ஆசை………!
எப்போதும் உன் காதல்னயி இருந்து விட ஆசை……!
~~
தனிமையில் நீ இருந்தால் நினைவாக நான் வர ஆசை………..!
நினைவாக நீ இருந்தால் நிஜமாக நான் வர ஆசை…………..!
~~
எப்போதும் என் கனவில் நீ வர ஆசை………………….!
கனவில் நடப்பதெல்லாம் நிஜமாக வேண்டும் என்று ஆசை………!
~~
என் மனதுக்குள் உன்னை குடி வைக்க ஆசை……….!
என் உயிரை உன் உயிரில் கலந்து விட ஆசை…………!
~~
உனக்காக என் உயிரை தந்து விட ஆசை………!
உனக்காக ஓர் ஜென்மம் எடுத்து வர ஆசை………..!