♫ என்னவளை நினைக்கும் பொழுதெல்லாம் இதயம் துடிதுடிக்கிறது. என் இதயத்தில் வாழும் அவளுக்கு வலிக்கக்கூடாது என்பதற்காக வரம் கேட்கிறேன் கடவுளிடம் என் இதயம் நின்றுபோக.
உன் செவ்விதழ் திறந்து பேசுவதில்… நீ வள்ளல் என்பதை ஒத்துக் கொள்கிறேன்..! அதே வேளையில் உன் செவ்விதழ்களை மூடி எனக்கொரு முத்தமிடு… என்றால் மட்டும் கொடுக்க மாட்டேன் என கஞ்சத் தனம் செய்கிறாயே அது ஏன்? வள்ளலிடம் கஞ்சத்தனம் கூடாது பெண்ணே..! நீ வள்ளலாய் இருந்தால்தான் இந்த வறியவனுக்கு வாழக்கையே..!
எப்போதெல்லாம் உன் காதலி நினைவுகள் உனக்கு வருகிறது எனக் கேட்கிறார்கள் எத்தனை முறை சுவாசித்தேன் என யாரேனும் கணக்கு வைக்க முடியுமா? ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ என்னவளே.. காலமெல்லாம் உனக்காக காத்திருப்பேன் உன் வரவை எண்ணி! வந்துவிட்டால் உன் இதய மடியில் வாழ்ந்திருப்பேன்............ இல்லையேல் மடிந்திருப்பேன் பூமித்தாயின் மடியில்.....