Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

திங்கள், 18 ஜனவரி, 2010

காதலி






எப்போதெல்லாம் உன் காதலி
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறார்கள்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
என்னவளே..
காலமெல்லாம்
உனக்காக காத்திருப்பேன்
உன் வரவை எண்ணி!
வந்துவிட்டால்
உன் இதய மடியில்
வாழ்ந்திருப்பேன்............
இல்லையேல் மடிந்திருப்பேன்
பூமித்தாயின் மடியில்.....



என்னவள்





என்னவள் புன்னகைக்கே,
சிவந்த பூவாய் பூத்து கிடக்கும் பூமி...

அவள் பார்க்கும் பார்வைக்கே,
இலை வெட்டுகளை இணம் கேட்கும் மரங்கள்...

அவள் பேசும் பேச்சுகளுக்கே,
ஓடை நீரின் மொழிகளை ஒதுக்கும் ஓடை மீன்கள்...

அவள் கொண்ட காதலுக்கே,
வானம் கொண்ட வீண்மினை வம்புகிழுக்கும் நின்மலன் (நான்)...




கவிதை







முனிவர்கள் கடவுளைப் பார்ப்பதற்காகத்,,
தவம் இருக்கிறார்கள்,,
நானே
ஒரு தேவதையை பார்த்துவிடு
தவம் இருக்கிறேன்

♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥

இன்னொரு பிறவி வரை
என்னவளை நேசிப்பேன்
என் உயிர்
பிரிகின்றபோதும் அவளையே
சுவாசிப்பேன்


சனி, 26 டிசம்பர், 2009

முத்தம்




முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

தேவதை




நான் முத்தம் கேட்கையில்
சீ! பொறுக்கி என்பாய் வெட்கத்துடன்!

நீ வெட்கப்படும் அழகை காணவே ஆயிரம் பொறுக்கிதனங்கள் செய்யலாம்!

பெண் வெட்கபட்டால் தேவதை ஆகிறாள்! தேவதை நீ வெட்கபட்டால் நான் என்ன ஆவது?

கவிதை





கவிதை பற்றி கவிதை எழுதுவது கடினம் என்றனர்...
அப்படியா என்றேன் சிரித்துகொண்டே.....
இன்று என்னவளை பற்றி கவிதை எழுதயிலே உணர்ந்தேன் .....
ஆம் கவிதை பற்றி கவிதை எழுதுவது கடினம் தான் என்று.....

முத்தம்




அழகியே ...!
நான் உன்னிடம் கேட்பதெல்லாம் ,
ஒரே ஒரு முத்தம் தான் .....!
உன் க
ன்னக்குழி அளவு முத்தம் .
தான்...
ஆனால் ......!
என் கன்னம் குழி விழும் ..
அளவிலான முத்தம் ......!

Powered By Blogger